ADVERTISEMENT

சிதம்பரம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள்!

10:39 AM Apr 06, 2020 | santhoshb@nakk…


கரோனா தொற்று உலக நாடுகளில் உள்ள பொதுமக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனையொட்டி தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

ADVERTISEMENT


இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் விதமாக சிதம்பரம் நகராட்சியில் உள்ள 150- க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நகர் முழுவதும் குப்பைகளை அகற்றி கிருமி நாசினி தெளித்து கடுமையானப் பணிகளைத் தினம்தோறும் செய்து வருகிறார்கள்.

ADVERTISEMENT


இவர்களுக்குச் சிதம்பரம் நகராட்சி சார்பில் தலா 25- கிலோ அரிசி, முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நகராட்சியில் நடைபெற்றது.இதில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர் அனைவருக்கும் பொருட்களை வழங்கினார். பின்னர் சிதம்பரம் நகராட்சி சார்பில் சமூகப் பரவலை தடுக்கும் விதமாக ரூ.100 மதிப்புள்ள காய்கறிகள் கொண்ட தொகுப்பை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.


இதனையும் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொடங்கி வைத்து தெருக்களில் வரும் பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன், மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT