ADVERTISEMENT

''இதுதான் சார் கோபம்...'' காதல் மனைவி தற்கொலை... உடலைக்கூட பார்க்காமல் கணவனும் தற்கொலை... 

12:07 PM Aug 03, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கணவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, உடலைக்கூட பார்க்க முடியாமல் இருந்த அவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 22 வயதான பிரவின்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஈசா பல்லாவரத்தை சேர்ந்த 19 வயதான தீபிகா என்ற பெண்ணுடன் பழகியுள்ளார். பின்னர் இவர்களது நட்பு காதலாக மாறியது. இரண்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள், தங்களது வீட்டில் இதனை தெரிவித்துள்ளர். பெற்றோர்கள் இவர்களது திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பல்லாவரம் காவல்நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு வேண்டும் என்று முறையிட்டனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமாதானம் செய்தனர். போலீசாரின் அறிவுரையை ஏற்று பிரவீன்குமார் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.

ஆடி மாதம் என்பதால் பெரியோர்களின் ஆலோசனைப்படி, தீபிகாவை கடந்த 20ஆம் தேதி அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்துள்ளார். தொடர்ந்து பிரவீன்குமார் தனது வீட்டில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

இந்தநிலையில் தீபிகா, 30-ந் தேதி வீட்டின் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பான தகவல் பல்லாவரம் போலீசாருக்கு கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீபிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்டனர்.

பெண்ணின் தந்தை சந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில், பல்லாவரம் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி வந்தார். திருமணம் ஆகி இரண்டரை மாதங்களில் தீபிகா இறந்ததால் இதுபற்றி தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது.

இதனிடையே போலீசார், பிரவின் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தீபிகா என்னிடம் அன்பாக இருந்தார். அவரது தாய் வீட்டுக்கு சென்றபிறகு அங்கு இருந்து எனக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். வேலையாக இருந்ததால் போனை எடுக்காததால், போன் செய்யும்படி எஸ்.எம்.எஸ். அனுப்பினார். ஆனால் நான் வேலையில் இருந்ததால் அதை கவனிக்கவில்லை. இதுதான் சார் கோபம். அந்த கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார்.

தீபிகாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பிரவீன்குமார் முயன்றார். ஆனால் பெண் வீட்டு தரப்பில் கோபமாக இருப்பதால் அங்கு செல்ல வேண்டாம் என்று போலீசார் ஆறுதல் கூறினர். திங்கட்கிழமை (இன்று) காலை கோட்டாட்சியர் விசாரணைக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தனர்.

காதல் மனைவி இறந்த சோகம் தாங்காமல் பிரவின்குமார், நேற்று குரோம்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குரோம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் திருமணம் செய்த தம்பதிகள், அடுத்தடுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல்லாவரம், குரோம்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT