சென்னையை சேர்ந்த பார்த்திபன் துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கு முதல் திருமணத்தில் ராகவி என்ற ஆறு வயது மகள் உள்ளார். முதல் மனைவி இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்து விடவே சூர்யகலா என்ற பெண்ணை பார்த்திபன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். சூரியகலாவிற்கும், பார்த்திபனுக்கும் இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. முதல் மனைவி மூலமாக பார்த்திபனுக்கு பிறந்த ராகவி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/baby_06512268-777f-11e9-9ebe-bd8a57c16f3e2222.jpg)
இந்நிலையில் முதல் மனைவியின் குழந்தையான ராகவி மீது சூர்யகலாவிற்கு வெறுப்பும், கோபமும் இருந்ததாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து குழந்தை ராகவியை இரண்டாவது மாடியில் இருந்து வீசி கொலை செய்த சூர்யகலா, ராகவியை 2 மணி நேரமாக காணவில்லை என்றும் அவரை தேடி வருவதாகவும் தனது கணவருக்கு தகவலளித்துள்ளார். உடனே வீட்டிற்கு வந்த பார்த்திபன் அப்பகுதி முழுவதும் ராகவியை தேடியுள்ளார்.
அப்போது வீட்டின் மூன்றாவது மாடியில் இருந்து பார்த்தபோது வீட்டின் பின்புறம் ராகவி சடலமாக கிடந்ததை பார்த்து பார்த்திபன் அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சேலையூர் போலீசார் விசாரணை நடத்தினர். சூர்ய கலாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தவறி விழுந்ததாக கூறினார். அதை தொடர்ந்து அவரிடம் மீண்டும் நடத்தப்பட்ட விசாரணையில் சூர்யகலா சிறுமியை கொன்றது. நான் தான் என ஒப்புக்கொண்டதை அடுத்து காவல்துறையினர் சூர்யகலாவை கைது செய்தன. மாடியில் இருந்து தவறி விழுந்ததாக சூர்யகலா பொய் சொன்னது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)