Neyveli

திருமணமாகி 10 மாதமே ஆன நிலையில் மனைவியை கொன்று பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படைவீரராக கணபதி என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் ஆந்திர மாநிலம்சிக்காகுலம் மாவட்டத்தில் உள்ள வீராகோட்டம் கிராமத்தை சேர்ந்தவர். இவர் தனது தாய்மாமன் மகளான சந்தோஷினி என்பவரை கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவரும் நெய்வேலியில் பாதுகாப்பு படைவீரர்களுக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் கணபதி மற்றும் அவரது மனைவி சந்தோஷினி வீட்டை விட்டு வெளியே வராததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் நெய்வேலிகாவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த நெய்வேலி காவல்துறையினர் வீட்டில் சென்று பார்த்தபோது, சந்தோஷினி மின்சார வயரால், கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கணபதியும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. திருமணமாகி பத்து மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த கொலை மற்றும் தற்கொலைக்கானகாரணம் குறித்து நெய்வேலி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.