ADVERTISEMENT

சென்னையில் வெடிகுண்டு வீச்சு...தென்காசியில் மூவர் சரண் !

02:34 PM Mar 07, 2020 | prithivirajana

சென்னை அண்ணாசாலையில் கடந்த 3ம் தேதி நடைபெற்ற வெடிகுண்டு வீச்சு வழக்கில் போலீசார் தேடிவந்த 3 பேர்கள் நேற்று தென்காசி கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை 6 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னையின் முக்கிய பகுதியான அண்ணாசாலை ஜெமினி மேம்பாலம் அருகே கடந்த 3ம் தேதி பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், கார் மீது இரண்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பி விட்டனர். சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்தச் சம்பவம் குறித்து சென்னை தேனாம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT


இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த தண்டையார்ப் பேட்டையைச் சேர்ந்த கமருதீன் (வயது30) ராஜசேகர் (வயது28) பிரசாந்த் (வயது25) தான் என்ற ஜான்சன் (வயது35) ஆகியோர் மதுரை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தனர்.சரணடைந்த 4 பேரையும் மார்ச் 11ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்த 4 பேரும் மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை தண்டையார்ப் பேட்டை பகுதியை சேர்ந்த பாபு சதிஷ் (வயது26) சேகர் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் (எ) செல்வா (வயது25) புதுவண்ணாரப்பேட்டை கேணி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில் என்பவரது மகன் ஹரிஷ் (வயது20) ஆகிய 3 பேரும் நேற்று தென்காசி மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் சரணடைந்தனர் அவர்களை நீதிபதி பிரகதீஸ்வரன் 6 நாள் நீதிமன்ற காவலில் வைக்கவும் பின்னர் மூன்று பேரையும் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து 3 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT