ADVERTISEMENT

"காரில் சேஸிங் செய்து மூன்று பேரை மடக்கி பிடித்தோம்"- சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி!

01:46 PM Nov 13, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

சென்னை சவுகார்பேட்டையில் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், "மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேரை மகாராஷ்டிராவின் சோலாப்பூரில் கைது செய்தோம். காரில் சேஸிங் செய்து முக்கிய குற்றவாளி கைலாஷ், ரவீந்திரநாத், விஜய் உத்தம்கமலை ஆகியோரை கைது செய்தோம். குடும்பத் தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.

ADVERTISEMENT

சென்னை போலீஸ் வருவதை அறிந்து புனேவில் இருந்து சோலாப்பூர் தப்பினர். சோலாப்பூரில் இருந்து புனேவுக்கு வாகனத்தில் தப்பிச் செல்லும் போது குற்றவாளிகளை மடக்கிப் பிடித்தனர். இல்லற வாழ்க்கையில் ஷீத்தல்- ஜெயமாலா இடையே பிரச்சனை இருந்தது தெரிய வந்துள்ளது. மூன்று பேர் கொலை வழக்கின் விசாரணைக்காக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போலீசார் உதவினர். மூன்று பேரை சுட்டுக்கொன்றத்தில் ஷீத்தலின் மனைவி ஜெயமாலா, உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர். ஷீத்தல் குடும்பத்தினரை திட்டமிட்டு ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சுட்டுக்கொல்லப்பட்டது ஒரு திட்டமிட்ட படுகொலை.

கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கி தமிழகத்தைச் சேர்ந்தது கிடையாது; வெளியில் இருந்து வந்ததாகும். லாக்கர் காணாமல் போனதாகக் கூறியுள்ளனர்; விசாரணை நடத்தி வருகிறோம். மற்ற குற்றவாளிகள் யார் என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். மேலும் மூன்று பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்." இவ்வாறு சென்னை மாநகர காவல் ஆணையர் கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT