chennai police commissioner press meet

Advertisment

சென்னையில் எந்தவித தளர்வுகளின்றி இன்று முதல்முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை பூக்கடை பகுதியில் பொதுமுடக்கம் தொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், "பொது முடக்கம் முழுமையாக அமலில் உள்ள நிலையில்மக்கள் ஒத்துழைப்பு அளிக்கின்றனர். சில இடங்களில் போலீஸ் கடுமையாக இருப்பதாக தெரிந்தால் உயரதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் நெரிசல்உள்ள பகுதியில் கட்டுப்பாடுகள்தீவிரமாகபின்பற்றப்படும், 12 நாட்களை மக்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். 12 நாள் கஷ்டத்தைப் பொறுத்துக்கொண்டால் வருங்காலம் சிறப்பாக அமையும். பொருட்களை வாங்க தினமும் வெளியே வர வேண்டாம்" என்றார்.