ADVERTISEMENT

சென்னையில் பேனர், பதாகைகளை அகற்ற உத்தரவு!

11:08 AM Nov 25, 2020 | santhoshb@nakk…


ADVERTISEMENT

ADVERTISEMENT

'நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, விழுப்புரம், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 'நிவர்' புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து இன்றிரவு அல்லது அதிகாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் எடுத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அரசு நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மரம் விழுந்தால் உடனடியாக அகற்றவும், தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றும் வகையில் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளன.

இந்த நிலையில், இன்று மதியம் 12.00 மணிக்குள் சென்னையில் உள்ள அனைத்து பேனர் மற்றும் பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும்போது பலத்த காற்று வீசும் என்பதாலும், பேனர், பதாகைகள் பறந்து சென்று விபத்து நேரிடும் என்பதாலும் மாநகராட்சி இந்த அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT