ADVERTISEMENT

காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெறுகிறது... தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்

09:28 AM Nov 15, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் கடந்த ஒருவாரமாக அநேக மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதன் காரணமாக வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசித்துவந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் பல இடங்களில் தற்போதும் நீர் தேங்கியுள்ள நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

இதற்கிடையே, தற்போது வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று, நவம்பர் 17ஆம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வரும் 18ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT