ADVERTISEMENT

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

03:43 PM Dec 26, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வனிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நேற்று (25.12.2022) இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (26.12.2022) காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும், இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT