ADVERTISEMENT

நாகையில் மத்திய ஆய்வுக்குழு!!

09:27 AM Nov 26, 2018 | kalaimohan

ADVERTISEMENT

காஜா புயல் சேதத்தை மதிப்பிடுவதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய ஆய்வுக் குழு நேற்று முன்தினம் மாலை புதுக்கோட்டையில் புயல் சேதங்களை ஆய்வு செய்யத் துவங்கியது.

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த மத்திய ஆய்வுக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஆய்வினை முடித்துக் கொண்டு தஞ்சை புறப்பட்டனர்.

டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழு நேற்று காலை தஞ்சை, ஒரத்தநாடு புதூர், புலவன்காடு, நெமிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் நடத்தினர்.அதேபோல் திருவாரூரிலும் ஆய்வுகள் செய்தனர்.

இந்நிலையில் இன்று நாகை மாவட்டத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது நாகையில் வேட்டைக்காரன் இருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளது மத்திய ஆய்வுக்குழு.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT