
கஜா புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் பலத்த சேதம் அடைந்து பொதுமக்கள் உணவு, குடிநீர், இருப்பிடம் இன்றி சாலையில் அமர்ந்து கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட வராத அதிகாரிகளை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் நாகையில் போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகளான உணவு, குடிநீர் போன்றவை கிடைக்காததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் சேதங்களை சீர்படுத்தும் பணிகள் நடைபெறுவதால். சீரமைப்பு பணிகளை முன்னிட்டு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.