ADVERTISEMENT

"மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தராது" - அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

06:34 PM Jul 06, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காவிரி, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, டெல்லியில் மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (06/07/2021) சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், "மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி தராது என ஷெகாவத் கூறினார். தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மத்திய அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் கூறினார். கர்நாடகா ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டுமே மேகதாது அணை கட்டி விட முடியாது என அமைச்சர் ஷெகாவத் கூறினார். காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்கக் கோரியுள்ளோம். மார்க்கண்டேய நதி குறுக்கே கர்நாடகா தன்னிச்சையாக அணை கட்டியது குறித்த பிரச்சனையையும் எழுப்பினோம்" எனத் தெரிவித்தார்.

"தமிழகம் ஒத்துழைக்காவிட்டாலும் மேகதாது அணை திட்டத்தைச் செயல்படுத்துவோம். மேகதாது திட்டத்தை இணக்கமாகச் செயல்படுத்துவதற்காகவே தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதினேன்" என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தமிழக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள்- அமைச்சர் துரைமுருகனை இன்று எதேச்சையாகச் சந்தித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT