ADVERTISEMENT

கோவையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து!!

11:30 AM Feb 21, 2019 | arulkumar

கோவை பீளமேடு அருகே உள்ள கொடீசியா சாலையில் அதிவேகமாகமாக காரை ஓட்டி வந்தவர்கள் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதிய வீடியோ காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

கோவை பீளமேடு அருகே கொடிசியா தொழிற்காட்சியகம் உள்ளது.இந்த கொடிசியா தொழிற்காட்சியகம் சாலையை சுற்றி மொத்தம் 4க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் 5 கல்லூரிகளும் உள்ளது. அதேபோல நீண்ட சாலையான இந்த சாலையில் கல்லூரி மாணவர்கள் இருசக்கர வாகனங்களையும் ,கார்களையும் போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாக ஓட்டிவருவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.

ADVERTISEMENT

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாக இருப்பதால் இந்த கொடிசியா வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மூன்று முக்கு சாலையில் தினமும் இரண்டுக்கு மேற்பட்ட விபத்துகள் ஏற்படுகிறது. அதேபோல ஜென்னி கிளப் சாலை துவக்கப்பட்ட இடத்திலிருந்து கொடிசியா வரை இறக்கமான பகுதி என்பதால் வாகனங்கள் அதிவேகமாக வருகிறது.

இந்தநிலையில் ,நேற்று மாலை 4;42 மணியளவில் TN 38 AJ 1383, என்ற சொகுசு காரும் மற்றொரு சொகுசு காரும் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் ஜென்னி கிளப் பகுதியில் இருந்து கொடிசியா தொழிற்காட்சி வளாகம் சாலை வழியாக அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது இஸ்கான் கோயில் சாலையிலிருந்து ஜென்னி கிளப் பகுதியை நோக்கி இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் வாகனத்தை வளைக்கும் பொழுது விதியை மீறி ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சொகுசு காரை ஓட்டி வந்தவர் இருசக்கர வாகனத்தின் மீது மோதினார். இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டார். அதேபோல காரை ஓட்டி வந்த நபர்கள் காரை நிறுத்தாமல் மீண்டும் அதிவேகமாக சென்றனர்.

இதையடுத்து அந்த பகுதி மக்கள் அதிவேகமாக சென்ற காரை துரத்தி பிடிக்க முற்பட்டனர். ஆனால் கார் சென்ற வேகத்திற்கு பிடிக்க முடியவில்லை. பின்னர் தகவலறிந்து வந்த பீளமேடு போக்குவரத்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் கண்டிப்பாக கல்லூரி மாணவ மாணவிகளாக தான் இருக்கும் என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விபத்து ஏற்படுத்திய காரில் பிளேக் டிண்ட் ஒட்டியுள்ளதால் காரை ஓட்டி வந்தவர் ஆணா பெண்ணா என்பதும் தெரியவில்லை. மேலும் இந்த சாலையில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் விபத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT