ADVERTISEMENT

ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்! - தெற்கு ரயில்வே அறிவிப்பு

10:09 AM Nov 10, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

காரைக்குடி, மதுரை ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்றுவருவதால் காரைக்குடி - சென்னை, மதுரை - சென்னை, புதுச்சேரி - டெல்லி உள்ளிட்ட ரயில்கள் இன்று (10.11.2021) ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேற்கண்ட ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘காரைக்குடி - எழும்பூர் சிறப்பு ரயில் (வண்டி எண் 02606), எழும்பூர் - மதுரை சிறப்பு ரயில் (வண்டி எண் 02635), புதுச்சேரி - டெல்லி (வண்டி எண் 04071) ஆகிய ரயில் சேவையில் செய்யப்பட்டிருந்த மாற்றங்கள் ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் இயங்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT