Skip to main content

‘தமிழகத்தில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து’ - ரயில்வே தகவல்

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Trains from Tamil Nadu to Delhi are cancelled Railway  Information

 

வடக்கு ரயில்வே சார்பில் ஆக்ரா கோட்டத்திற்கு உட்பட்ட மதுரா ரயில் நிலையம், மதுரா - பல்வால் ரயில் நிலைய பிரிவுக்கு உட்பட்ட ரயில்பாதை, சிக்னல் பணிகள், ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக வரும் (2024 ஆம் ஆண்டு) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

அதன்படி, ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 10, 12, 17, 19, 24, 26, 31 பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட வேண்டிய கன்னியாகுமரி - டெல்லி நிஜாமுதீன் திருக்குறள் விரைவு ரயில் (வண்டி எண் : 12641) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 14, 16, 21, 23, 28, 30 பிப்ரவரி 4 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - டெல்லி நிஜாமுதீன் விரைவு ரயில் (வண்டி எண் : 12651)  ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 10, 14, 17, 21, 24, 28, 31 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (வண்டி எண் : 12687) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 8,15, 22, 29 ஆகிய நாட்களில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட வேண்டிய திருநெல்வேலி - ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா விரைவு ரயில் (வண்டி எண் : 16787)  ரத்து செய்யப்படுகிறது.

 

அதே போன்று டெல்லியில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு வரும் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜனவரி 13, 15, 20, 22, 27, 29, பிப்ரவரி 3, 5 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் விரைவு ரயில் (வண்டி எண் : 12642) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 16, 18, 23, 25, 30 பிப்ரவரி 1, 6 ஆகிய தேதிகளில் டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி நிஜாமுதீன் - மதுரை விரைவு ரயில் (வண்டி எண் : 12652) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 15, 19, 22, 26, 29, பிப்ரவரி 2, 5 ஆகிய தேதிகளில் சண்டிகரில் இருந்து புறப்பட வேண்டிய சண்டிகர் - மதுரை விரைவு ரயில் (வண்டி எண் : 12688) ரத்து செய்யப்படுகிறது. ஜனவரி 11, 18, 25, பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ராவில் இருந்து புறப்பட வேண்டிய ஸ்ரீ வைஷ்ண தேவி கட்ரா - திருநெல்வேலி விரைவு ரயில் (வண்டி எண் : 16788) ரத்து செய்யப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

ரயில் பயணியிடம் கைவரிசை காட்டிய நபர்; போலீசார் அதிரடி நடவடிக்கை

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Police action on A person who shows his hand to a train passenger

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பயணியிடம் சங்கிலியைப் பறித்த நபரை, ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

திருச்சியில் இருந்து நாகூர் செல்லும் விரைவு ரயில் ஏப்ரல் 26 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 5 ஆவது நடைமேடையில் புறப்படத் தயாராக நின்றிருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் ரயிலில் அமர்ந்திருந்தனர். அப்போது ஜன்னலோரத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர், ரயிலில் அமர்ந்திருந்த நெல்லையைச் சேர்ந்த க. வெங்கடேஷ் என்ற பயணியின் கழுத்தில் கிடந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். 

இந்த சம்பவம் தொடர்பாக வெங்கடேஷ் போலீசாரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில், திருச்சி ரயில்வே போலீஸ் ஆய்வாளர் மோகனசுந்தரி, உதவி ஆய்வாளர்கள் சுரேஷ்குமார், திருமலைராஜா மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (28-04-24) காலை திருச்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் சுற்றித்திரிந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த நபர் கடலூர் மாவட்டம் அகரம், தங்காளிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ர. கோவிந்தராஜ் (26) என்பதும், அவர்தான் வெங்கடேஷின் சங்கிலியை பறித்தது மற்றும் விருத்தாசலம் ரயில் நிலையத்திலும் இதேபோல ஒரு திருட்டு சம்பவத்தில் அவருக்கு தொடர்பிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்து திருச்சி மாவட்ட 4 ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.