ADVERTISEMENT

9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா?-2 மணிக்கு பதிலளிக்கும்படி உத்தரவு 

01:15 PM Dec 05, 2019 | kalaimohan

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வார்டு மறுவரையறை முடிந்தவுடன்தான் தேர்தல் அறிவிக்கவேண்டும் என்று திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இன்று கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்திற்கு மேலாக உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கானது விசாரிக்கப்பட்டு வருகிறது. திமுகவைவிட அதிக கேள்விகளை நீதிபதிகள் தமிழக அரசிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் வைத்துள்ளனர். தொகுதி மறுவரையறைகளை முழுமையாக முடித்துவிட்டீர்களா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு ஆம், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறைகளை முடித்திருக்கிறோம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ADVERTISEMENT


அப்படி என்றால் புதிய மாவட்டங்களை பிரித்து ஏன்? பிரித்ததற்கான நடைமுறைகளை பின்பற்றினீர்களா? குறிப்பாக இடஒதுக்கீடு முறைகளை சரியாக செய்திருக்கிறீர்களா என்ற கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். அதை இப்பொழுது செய்யவில்லை மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொண்ட தொகுதி மறுவரையறை பணிகளை அடிப்படையாக கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

ஆனால் மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த பதில் நீபதிகளுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை எனவே அந்த 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கலாமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். திமுக தரப்போ இல்லை தள்ளிவைத்தால் மொத்தமாக தள்ளிவைக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தது.

அதனையடுத்து புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளிவைக்கலாமா? அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா? என மதியம் 2 மணிக்கு பதிலளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT