ADVERTISEMENT

அமைச்சர் உத்தரவின் பேரில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் வணிகவரித்துறையினர்!

06:41 PM Sep 16, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசு வணிக வரியைப் பெருக்குவதற்குத் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அரசுக்கு வர வேண்டிய முறையான வரிகளை வசூலித்தும் வருகிறது. வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து வணிக வரித்துறை சோதனை நடத்தி வருகிறது. வணிகவரி மூலம் ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி வணிகவரி அரசுக்குக் கிடைக்கிறது. ஒவ்வொரு பிரிவாகச் சோதனை நடத்துவதற்கு வணிகவரித் துறை திட்டமிட்டுள்ளது.

அதன்படி நேற்றைய தினம் ஜவுளிக் கடைகள் மற்றும் அதோடு தொடர்புடைய நிறுவனங்களில் சோதனை நடைபெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல நிறுவனங்களிலும் சோதனைகளை நடத்துவதற்கு வணிகவரித் துறை திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன்படி நேற்று 132 ஜவுளிக் கடைகளில் தமிழகம் முழுவதும் வணிக பரிசோதனை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அதன் ஒரு பகுதியாகத் திருச்சி மாநகரில் உள்ள சில ஜவுளிக் கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகள், வரி செலுத்திய விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த சோதனை இன்று வரை தொடர்ந்து நீடித்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT