ADVERTISEMENT

உடல் உறுப்பு தானம்-உதவி கேட்டு தவிக்கும் தாய்க்கு வீடு தேடி வந்த உத்தரவு!

08:15 PM Jan 09, 2019 | paramasivam

நெல்லை மாவட்டத்தின் வி.கே.புரம் பகுதியின் டாணாவைச் சேர்ந்தவர் பழனிக்குமார் (26) முதுநிலைப் பட்டதாரி வாலிபர் கடந்த 03ம் தேதியன்று தன் நண்பருடன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கிக் கொண்டார் உடனடியான அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனிக்குமார் மேல் கிசிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தன் மகனின் உடலுறுப்புகளை தானமாகத் தர சம்மதித்த அவரது தாயார் சாரதா, அதன் மூலம் என் மகன் உயிர் வாழ்வதே தனக்கு திருப்தி என்றிருக்கிறார்.

அந்த அனுமதியோடு பழனிக்குமாரின் முக்கியமான உடலுறுப்புகளான கிட்னி, இதயம் இரண்டு கண்கள் ஆகியவைகளை டீன் கண்ணன் தலைமையிலான டாக்டர்களின் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு மதுரை, சென்னை மருத்துவமனைகளில் 8 நோயாளிகளின் தேவைக்காக கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்குப் பொருத்தப்பட்டது.

உறுப்பு தானம் பெற்ற அவர்கள் நலமுடன் இருப்பதாகச் சொன்னார் டீன் கண்ணன். இதனிடையே சராசரிக்கும் கீழே வருமானம் கொண்ட பழனிக்குமாரின் தந்தை மரணமடைந்து விட தாயார் சாரதா தன் ஒரே மகனும் விபத்தில் மரணமடைத்தால் போதிய வருமானமின்றித் தவித்தார். நெல்லை கலெக்டர் ஷில்பாவிடம் நேற்று முதியோர் உதவித் தொகை வழங்க வேண்டி மனுக் கொடுத்தார். அதில் தன் வறுமை நிலையைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று கலெக்டர் ஷில்பா, தாய் சாரதாவின் வி.கே.புரத்தின் வீடு தேடிச் சென்று அவருக்கான முதியோர் உதவித் தொகை உத்தரவைக் கொடுத்தவர் வேறு உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

தன் உடல் உறுப்பு தானம் மூலம் எட்டு உயிர்களுக்கு மறு ஜென்மம் கொடுத்திருக்கிறார். ஏழைத்தாய் சாரதாவின் மகன் பழனிக்குமார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT