covai old man organ donate erode youngster life extend

ஈரோடு மாவட்டம்கோபியைச்சேர்ந்த 41 வயது நோயாளிஒருவருக்குச்சிறுநீரகம் செயல் இழந்து,ஈரோடுதனியார் மருத்துவமனையில்டயாலிசிஸ்சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தமிழ்நாடு உடல் உறுப்பு தான அமைப்பில் சிறுநீரகம்பெறக்கோபியைச்சேர்ந்த நோயாளி பதிவு செய்து கடந்த 3ஆண்டுகளாகக்காத்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 62 வயதுடையவரின் சிறுநீரகம்,கோபியைச்சேர்ந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்க முடிவானது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில்கோபியைச்சேர்ந்தவர் அனுமதிக்கப்பட்டு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குதயார்ப்படுத்தினார். தொடர்ந்து கோவையிலிருந்துஈரோடுதனியார் மருத்துவமனைக்குஆம்புலன்சுமூலம் ஒரு மணி நேரத்தில்சிறுநீரகம் கொண்டு வரப்பட்டு, மருத்துவர் சரவணன் தலைமையிலான மருத்துவகுழுவினர்கோபியைச்சேர்ந்தவருக்குவெற்றிகரமாகச்சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தனர்.

Advertisment

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்டாக்டர்சரவணன் கூறுகையில், "கோபியைச்சேர்ந்தவருக்குகுரோனிக்கிட்னிவியாதி(சிகேடி) என்றநோய்பாதிப்புகாரணமாகச்சிறுநீரகம் செயலிழந்துவிட்டது. கடந்த 3 ஆண்டுகளாக எங்களது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். தற்போது, கோவையிலிருந்துதானமாகப்பெறப்பட்ட சிறுநீரகம் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம்வெற்றிகரமாகப்பொருத்தப்பட்டுள்ளது" என்றார்.