ADVERTISEMENT

கடலுக்குச் சென்ற படகு கரை திரும்பவில்லை... 5 மீனவர்களின் கதி என்ன..?

03:34 PM Jan 11, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீன்படி துறைமுகத்தில் இருந்து செல்னேந்தல் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் ராஜாக்கண்ணு என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், செல்லனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மகன் புரட்சிதாசன் (32), சண்முகம் மகன் பாண்டியன் (65), செல்லத்தம்பி மகன் பரசுராமன் (50), முத்துக்கருப்பன் மகன் கந்தவேல் (50) மற்றும் கிருஷ்ணாசிப்பட்டினம் சுப்பிரமணியன் மகன் செல்லத்துரை (52) ஆகிய 5 மினவர்களும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

இவர்கள் 10ஆம் தேதி மதியம் 12 மணிக்குள் கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், 11ஆம் தேதி மதியம் வரை 5 மீனவர்களும் படகும் கரைக்குத் திரும்பவில்லை. படகு பழுதாகி மீனவர்கள் கடலில் தத்தளிக்கிறார்களா அல்லது இலங்கை கடற்படை கைது செய்துள்ளதா என்ற தகவல்கள் ஏதும் தெரியவில்லை. அவர்ளுடன் கடலுக்குச் சென்று கரை திரும்பிய மீனவர்களும் அவர்களைக் காணவில்லை என்று கூறியுள்ளனர். ஆகவே கடற்படையினர் காணாமல் போன படகு மற்றும் மீனவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் சக மீனவர்கள்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT