ADVERTISEMENT

ப்ளூ காய்ச்சல்; பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டமில்லை.. - அமைச்சர் மா.சுப்பிரமணியம்

10:30 AM Sep 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

கோப்புப் படம்

ADVERTISEMENT

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ப்ளூ காய்ச்சல் பரவிவருகிறது. இதன் காரணமாக புதுச்சேரி அரசு, அம்மாநிலத்தில் இந்த மாதம் 17ம் தேதி முதல் 25ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழந்தைகளுக்கு ப்ளூ காய்ச்சல் பரவிவருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்த கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில்தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழ்நிலை தற்போது இல்லை. தொடர்ச்சியாக பள்ளிக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டம் தொடருமா என்பது விரைவில் தெரியவரும்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT