ADVERTISEMENT

''எந்த புள்ளியாக இருந்தாலும் சரி... கருப்பு ஆடுகள் களையெடுக்கப்படும்'' -அமைச்சர் ஜெயக்குமார்

01:00 PM Jan 29, 2020 | kalaimohan

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகி இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசார் இந்த முறைகேடு குறித்து விசாரித்து வருகின்றனர். இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தற்போதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த முறைகேடு தொடர்பாக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் சிறுபுள்ளியாக இருந்தாலும் சரி, பெரும் புள்ளியாக இருந்தாலும் சரி, கரும்புள்ளியாக இருந்தாலும் சரி, எந்த புள்ளியாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அது கருப்பு ஆடுதான். சமுதாயத்திற்கு ஏற்றுக்கொள்ளமுடியாத அந்த கருப்பு ஆடுகள் நிச்சயம் களையெடுக்கப்படும்.

அரசு அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இளைஞர்களும், தேர்வர்களும் எதிர்காலம் கொண்டு பயம்கொள்ள தேவையில்லை. ஒருசில சென்டரில் முறைகேடு நடந்திருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு சில மையங்களில் நடந்த முறைகேட்டிற்காக ஒட்டுமொத்த டிஎன்பிஎஸ்சி மீதும் குற்றம் சொல்ல முடியாது. எந்த ஓட்டையும் இல்லாமல் வருங்காலங்களில் தேர்வு நடத்தப்படும்.

தேர்வு எழுதிய அனைவரது விடைத்தாளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எனவே தவறு செய்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வை ரத்து செய்து முறைகேட்டில் ஈடுபட்ட ஒருசிலருக்காக தேர்வர்கள் அனைவரையும் தண்டிக்க முடியாது.

ஒரிசாவில் புற்றீசல் மாதிரி தேவையற்ற கோச்சிங் சென்டர் மற்றும் முறைகேட்டை தடுக்க தனியாக ஒரு சட்டமே இயற்றியுள்ளனர். அதேமாதிரியான சட்டத்தை மாடலாக வைத்து இங்கு ஒரு சட்டத்தை கொண்டுவர அரசு ஆலோசித்து வருகிறது. வருகின்ற கூட்டத்தொடரில் அரசு மசோதா கொண்டுவர ஆலோசித்து வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT