ADVERTISEMENT

ராதாரவி மீது வழக்குப் பதிவு!

10:31 AM Apr 04, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று (04/04/2021) இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க.,அ.ம.மு.க. விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மார்ச் 28- ஆம் தேதி அன்று கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து பா.ஜ.க.வைச் சேர்ந்த நடிகர் ராதாரவி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், வேட்பாளருமான கமல்ஹாசன் குறித்து அவதூறாக பேசியதாக, தேர்தல் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ராதாரவி மீது கோவை மாவட்டம், பந்தயசாலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT