ADVERTISEMENT

பா.ஜ.க. அரசுக்கு எதிராக வலுவாகும் மருத்துவர்கள் போராட்டம்

08:40 PM Jul 31, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

மத்திய பா.ஜ.க. மோடி அரசு கல்வியிலிருந்து கைத்தறி தொழில் வரை என பொதுமக்கள் நேரடியாக பயன் பெரும் அல்லது பங்கு பெறும் அமைப்புகள் அனைத்திலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் "தேசிய மருத்துவ ஆணையம்" இது அமைக்கப்பட்டால் அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்று கண்டன குரல்கள் இந்திய டாக்டர்களிடம் எதிரொளித்து வருகிறது.

ADVERTISEMENT

இதை எதிர்த்து தொடர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே மத்திய அரசின் நடைமுறையில் உள்ள இந்திய மருத்துவ கழகத்தை கலைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்த்தும், மருத்துவ துறைக்கும், பொது மக்களுக்கும் எதிராக அமைக்கப்பட உள்ள தேசிய மருத்துவ ஆணையத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் 24 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்பாட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் 1500 தனியார் ஆஸ்பத்திரிகள், கிளினிக்குகள் இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இன்று புற நோயாளிகளுக்கு எந்த ஒரு சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. இதனால் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள் வேதனையுடனும் ஏமாற்றத்துடன் திரும்பினர். ஆனால் அவசர கால சிகிச்சை பிரிவு மட்டும் இயங்கின. இந்த ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழக அரசு டாக்டர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

தனியார் ஆஸ்பத்திரியில் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தால் கோபி அந்தியூர் சத்தியமங்கலம் மொடக்குறிச்சி, சிவகிரி, சென்னிமலை, கவுந்தப்பாடி பவானி பெருந்துறை என மாவட்டம் முழுக்க உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை இன்றி பெரும் அவதியுற்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT