Advertisment

கரோனா காலத்தில் தற்காலிகப் பணி அடிப்படையில் துணை மருத்துவர்களாகப் பணி புரிந்த மருத்துவர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டை முற்றுகையிட முயன்றனர். முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் அழைத்துச் சென்று சமூக நலக்கூட மண்டபத்தில் அடைத்தனர்.