ADVERTISEMENT

ஜொள்ளர்கள் ஜாக்கிரதை! - கண்காணிக்கும் சைபர் கிரைம்!

07:33 PM Apr 25, 2018 | Anonymous (not verified)


ஃபேஸ்புக் வாட்ஸ்-அப் என எந்நேரமும் செல்ஃபோனை நோண்டிக்கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களது செயல்பாடுகளை காவல்துறை கண்காணித்துக்கொண்டிருப்பதை மறந்துவிடவேண்டாம். அதுவும், கண்ணை மூடிக்கொண்டு லைக் ஷேர் செய்கிறவர்கள் எப்போது வேண்டுமானாலும் சைபர் கிரைம் போலீஸால் கைது செய்யப்படலாம்!

“தில் இருக்குற ஆம்பளைங்க மட்டும் லைக் & ஷேர் பண்ணுங்க”

“செல்ஃபி புடிச்சிருந்தா லைக் ஷேர் பண்ணிட்டு இன்பாக்ஸ் வாங்க பேசலாம்!”

“நான் வேணுமா...? share பண்ணி comment பண்ணு... whatsapp நம்பர் தரேன்.. பேசலாம்.. நம்பிக்கை இருந்தா share பண்ணு”

“இன்னிக்கி என்னோட பிறந்த நாள்.. வாழ்த்து சொல்ல யாரும் இல்லை நீங்களாவது வாழ்த்தி ஒரு ஷேர் பண்ணுங்க பிரண்ட்ஸ்”

“Nan karuputhan.. friends ah edthupingala???”

“Hai friends முதல் தடவை சாரி கட்டி இருக்கேன் எப்படி இருக்கு...”

“நான் கருப்புதான். என்னை உங்களுக்கு புடிக்குமா? புடிச்சா ஷேர் பண்ணுங்க ஷேர் பண்றவங்களுக்கு மட்டும் நன்பர் தாரேன் பேசலாம்”

”நான் வேணுமா...? share பண்ணி comment பண்ணு... whatsapp நம்பர் தரேன்.. பேசலாம்.. நம்பிக்கை இருந்தா share பண்ணு...”

”என்னை புடிச்சு இருக்கா?

Share பண்ணுங்க Whatsapp குரூப்-ல இணைக்கிறேன்”

“Share pannitu inbox varavangalukku surprise kathutu irukku...”

“நான் auntyஆகிட்டேன் என்னை எல்லாம் உங்களுக்கு புடிக்குமா புடிச்சா குருப்புல ஷேர் பண்ணுங்க ஷேர் பண்றவங்களுக்கு நம்பர் தாரேன் பேசலாம்.

“Deep love பன்ன Boyfriend தேவை.. Like செய்துவிட்டு Share பண்ணுங்க உங்க inbox க்கு நான் வரேன்”- ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்தாலே பள்ளி-கல்லூரி மாணவிகள், இளம்பெண்களின் அழகான ஃபோட்டோக்களுடன் இப்படிப்பட்ட பதிவுகளுடன் பல்லிளிக்கும். இதைப்பார்த்ததுமே, பல ஆண்கள் ஜொள்ளிளித்துக்கொண்டு தில்லானவன் என்ற கெத்தை காட்டுவதற்காக அதில், லைக்- ஷேர்- கமேண்ட் இடுவதும் அதில் செல்ஃபோன் நம்பரை போடுவதும் என தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து, நம்மிடம் பேசும் சைபர் கிரைம் அதிகாரி ஒருவர், “இப்படி உலாவரும் ஃபோட்டோக்கள் அந்த பெண்களின் கருத்துகள் அல்ல. அந்த பெண்கள் அப்படி லைக், ஷேர், கமேண்டிட சொல்வதில்லை.

ADVERTISEMENT


தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண்கள் கேஷுவலாக பதிவேற்றம் செய்யும் புகைப்படங்களை சைபர் வில்லன்கள் டவுன்லோடு செய்து ஃபேக் அக்கவுண்ட் ஓப்பன் செய்து இப்படிப்பட்ட கமேண்டுகளை கொடுத்து மிஸ் யூஸ் செய்கிறார்கள். இப்படி, போலியான ஃபேஸ்புக் அக்கவுண்டுகளை ஷேர் செய்தவதால் அந்த சைபர் வில்லனுக்கு வருமானத்தை ஏற்படுத்திக்கொடுக்கிறீர்களே… எந்த புண்ணியமுமில்லை. ஏமாற்றங்கள்தான் மிஞ்சும். இப்படி, போலியான ஃபேஸ்புக் பக்கங்களிலிருந்து ஷேர் செய்யப்படும் புகைப்படங்களை லைக், ஷேர், கமேண்ட் கொடுத்து நீங்களும் சைபர் குற்றத்துக்கு துணையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால், சைபர் வில்லன்கள் தண்டிக்கப்படும்போது நீங்களும் சட்டப்படி தண்டிக்கப்படுவீர்கள்?” என்று எச்சரிக்கிறார் அந்த சைபர் கிரைம் அதிகாரியான நமது நண்பர்.

நாளை நமது குடும்பத்து பெண்களின் புகைப்படங்களையும் ஃபேக் அக்கவுன்ட் ஓப்பன் செய்து இப்படிப்பட்ட பதிவுகளை போடுவார்கள். அதனால், இதுபோன்ற பதிவுகளை முகநூல் நண்பர்கள் ஷேர் செய்து சைபர் குற்றத்திற்கு துணை நிற்கவேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ப்ளீஸ்!

தில் இருக்குற ஆம்பளைங்க மட்டும் லைக் & ஷேர் பண்ணுங்களேன்!!

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT