ADVERTISEMENT

'வட்டிக்கு வட்டி வசூலிப்பது நியாயமற்றது' - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

04:18 PM Nov 27, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பணம் கட்ட முடியாதவர்களுக்கு, வங்கிகள் வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்ற நடவடிக்கை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்துத் தெரிவித்துள்ளது.

கடன் தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கி ஒப்படைத்ததைத் திரும்பப் பெறக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் இன்று (27/11/2020) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'பணம் கட்ட முடியாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி போடுவது நியாயமற்றது. எந்த விதிகளின் அடிப்படையில் கடன்தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் தருகின்றன? தனியார் நிறுவனம், குண்டர்களை வைத்து வசூலிப்பதற்கு பதில் வங்கிகள் கடன் தராமல் இருக்கலாம். சிறு கடன் வாங்கிய ஏழைகள் துன்புறுத்தப்படுவது வேதனை. ரூபாய் 1,000 கோடி கடன் பெற்றவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர்' என்று கூறிய நீதிபதிகள், திருச்சி சின்னக்கடை வீதியில் உள்ள வங்கியின் மேலாளர் ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 1- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT