மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடலை சேலம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு எடுத்து வர அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல்லைச் சேர்ந்த அன்பரசன், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில்,‘கடந்த 29-ஆம்தேதி கேரள மாநிலம் அகழிக்காடு பகுதியில் மாவோயிஸ்ட் மணிவாசகம் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டார். மணிவாசகத்தின் மனைவி கலா, சகோதரி சந்திரா ஆகியோர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு ள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண கலா, சந்திரா ஆகியோரை திருச்சி சிறை போலீசார் அனுமதிக்கவில்லை. எனவே அவர்கள் இருவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கவும், மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண அனுமதிக்கவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’என்று கூறியிருந்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/manikkavasakam.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த மனுவை கடந்த 31-ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், ‘மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண, அவரது சகோதரி லட்சுமியை போலீசார் அனுமதிக்க வேண்டும். அவருடைய உடல் அடையாளம் காணப்பட்டால், உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்’என்று உத்தரவிட்டது. அந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் முன்பு நேற்று (05/11/2019) விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டது மணிவாசகத்தின் உடல் தான் என்று மனுதாரர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து,‘மணிவாசகத்தின் உடலை சேலம் மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வர வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/madurai333.jpg)
அங்கு அவரது உடலைத் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது. பொது மயானத்தில் அடக்கம் செய்யலாம். அவரது இறுதிச்சடங்கின்போது அசம்பாவிதம் நடக்காமல் தடுத்திட, உரிய பாதுகாப்பை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு, மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கலா, சந்திரா ஆகியோருக்கு இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்த விசாரணை 11- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)