ADVERTISEMENT

அண்ணா நினைவிடத்திலே கலைஞருக்கும் இடம் ஒதுக்க வேண்டும்: பாலபாரதி

10:27 AM Aug 08, 2018 | rajavel

ADVERTISEMENT

திமுக தலைவர் கலைஞர் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடமில்லை என தமிழக அரசு அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பாலபாரதி நம்மிடம் கூறியதாவது,

அண்ணா நினைவிடத்திலே அதன் பின்புற பகுதியில் கலைஞருக்கு இடம் ஒதுக்கீடு செய்யலாம். அரசு இந்த நேரத்தில் இப்படி ஒரு முடிவெடுப்பது என்பது சரியல்ல. தமிழ்நாடு ஒரு பெரும் துக்கத்தில் இருக்கிறது. அவர் ஒரு மூத்த தலைவர், 5 முறை முதலமைச்சராக இருந்தவர், அப்படி இருக்கும் போது மரியாதை செய்வது தான் சரியாக இருக்கும்.

மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எல்லோரும் முதல்வரின் வீட்டிற்கு சென்று அவரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அப்படி இருக்கும் போது, ஏற்கனவே இருக்கும் இடம் தானே அதனை ஒதுக்குவதில் தமிழக அரசுக்கு என்ன? ஆகவே அதனை ஒதுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் நிலைப்பாடாகவும் உள்ளது.

தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டு 11 நாட்களாக மருத்துவமனையிலே உள்ளனர். அப்படி இருக்கும்போது இது போன்ற முடிவுகள் அசம்பாவிதத்தை ஏற்படுத்தும். அதனால், கலைஞருக்கு மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகில் இடம் ஒதுக்குவதே சரியாக இருக்கும். நியாமாகவும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT