Skip to main content

சி.பி.எம் முற்றுகைப் போராட்டத்தில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயற்சி..!

Published on 01/12/2020 | Edited on 01/12/2020

 

CMP supports for farmers in dindigul district bala barathi mla


மத்திய அரசு புதிதாக மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டங்கள், விவசாயிகளுக்கு எதிராக உள்ளது எனக்கூறி இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 2 -ஆவது நாளாக திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி தலைமையில், 100 -க்கும் மேற்பட்டோர் மத்திய அரசின் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பினர்.  


போராட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவப் பொம்மையை எரிக்க முற்பட்டனர். அப்பொழுது போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் இருதரப்பிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர், அவர்களைக் கைது செய்தனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது. இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எல்லாருமே திருடங்கதான்... சொல்லப் போனா...' - பாடலுக்கு நடனமாடியபடி வந்த சுயேச்சை வேட்பாளர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Independent candidate danced to the song 'ellarume Thirudangathan... sollpona...'

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் இன்று மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. நேற்று முக்கிய கட்சிகளின் பிரமுகர்கள் முதல் சுயேச்சை வேட்பாளர்கள் எனப் பலர் இறுதி நாள் என்பதால் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் சிலர் நூதன முறைகளில் வந்து வேட்புமனு தாக்கல் செய்வது முன்னரே பல தேர்தல்களில் நடந்துள்ளது.

தேர்தல் நேரங்களில் இதுபோன்ற நூதன சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல்லில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 'எல்லாருமே திருடங்கதான் சொல்லப்போனால் குருடங்கதான்' என்ற பாடலை ஒலிக்கவிட்டபடி சாலையில் நடனமாடிக்கொண்டே வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story

“திண்டுக்கல் தொகுதி இந்திய அளவில் முதலிடத்தில் வரவேண்டும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
"Dindigul Constituency should come first in India" Minister Chakrapani

திண்டுக்கல் தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஆர். சச்சிதானந்தத்தை ஆதரித்து ஒட்டன்சத்திரம் தொகுதிக்குப்பட்ட அரங்கநாதபுரம், லெக்கையன்கோட்டை, சாலைபுதூர் சத்தியநாதபுரம், கே. அத்திகோம்பை, காளாஞ்சிபட்டி வெரியபூர், பழையபட்டி, திப்பம்பட்டி, கேதையூறும்பு, புலியூர்நத்தம், பி.என். கல்லுப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, குளிப்பட்டி, ஜவ்வாது பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாக்கு சேகரித்தார்.

அப்போது அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் சிலிண்டர் ரூ.5 00க்கும், பெட்ரோல் ரூ. 75க்கும், டீசல் ரூ.65க்கும் வழங்கப்படும். 100 நாள் வேலைத்திட்ட சம்பளம்  ரூ. 400 ஆக உயர்த்தப்படும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதி எம்.பி. வேலுச்சாமி, 5 லட்சத்து 50 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தமிழகத்தில் முதல் இடத்தையும், இந்திய அளவில் மூன்றாவது இடத்தையும் பிடித்தார். இந்த தேர்தலில் திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி அதிக வாக்குகளை பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தை பெற்ற தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இடம் பெற வேண்டும்” என்று பேசினார்.