ADVERTISEMENT

காவல்துறை சார்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

09:46 AM Jan 10, 2019 | sekar.sp

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் குறிஞ்சிப்பாடி காவல்துறை சார்பாக மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரி, மற்றும் ஆசியிரியர்கள், காவல்துறையினர், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு விழிப்புணர்வு கையேடுகளுடைய நோட்டு, மரகன்றுகள், விதை பந்துகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மரகன்றுகளை பள்ளி வளாகத்தில் நட்டுவைத்து மாணவர்களுக்கு, பசுமை பற்றிய விழிப்புணர்வையும், ஏற்படுத்தினார்.

காவல்துறை கண்காணிப்பாளர் மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்கள் உயர்ந்த இலட்சியத்தோடு, படிப்பில் கவனம் செலுத்தி எதிர் வரும் காலத்தில் அவரவர் நல்ல முறையில் வேலை வாய்பினை பெற்று, மகிழ்ச்சியுடன் வாழவேண்டும். தாங்கள் எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளிலும் செயல்படாமலும், நல்லொழுக்கத்துடன் பிறருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என கூறினார்.

இந்நிகழ்ச்சியை குறிஞ்சிப்பாடி காவல்துறை உதவி ஆய்வாளர் பிரசன்னா அவர்கள் முழு சிறத்தையோடு நடத்தினார் என்பது குறிப்பிடதக்கது. அடையாளம் அறக்கட்டளை இயக்குனர் ஐஸ்வரியா மணிகண்டன் மரகன்றுகளையும், விதை பந்துகளையும் வழங்கினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT