ADVERTISEMENT

'வழி தவறும் குழந்தைகளை மீட்பது எப்படி?'-சிதம்பரம் ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

05:18 PM Oct 02, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிதம்பரம் ரயில் நிலையத்தில் வழி தவறும் குழந்தைகளை மீட்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு சிதம்பரம் ரயில்வே காவல் ஆய்வாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். ரயில் நிலைய வணிக கண்காணிப்பாளர் விஜயகோபாலன் முன்னிலை வகித்தார். கடலூர் மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் முகுந்தன் பங்கேற்று, வழி தவறி வரும் குழந்தைகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கும் முறை, குழந்தைகள் உதவி மைய எண் 1098, போக்சோ சட்டம், குழந்தை திருமண தடுப்பு சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கிப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். உதவி ஆய்வாளர் அன்பு ஜூலியட், சங்கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT