சிதம்பரம் அருகே தெற்கு பிச்சாவரம் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் எம்எஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் அவரது வீட்டில் அருகே உள்ள கொட்டாயில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து விவரம் அறிந்த அண்ணாமலை நகர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவி குளிக்கும் போது ஒருவர் வீடியோ படம் எடுத்து மிரட்டுவதாக கடிதம் மட்டும் எழுதி வைத்துவிட்டு இவர் இறந்து விட்டதாக விசாரணையில் தெரிகிறது. இது குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.