ADVERTISEMENT

“தேர்தல் அமைதியாக நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”-காவல் ஆணையர்!

04:52 PM Jan 28, 2022 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு விநியோகம் மற்றும் மனு தாக்கல் நடைபெறுகிறது. இன்று (28.01.22)-ந் தேதி முதல் 04.02.22-ந்தேதி ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை என நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது.

திருச்சி மாநகரத்தில் உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணம் நடைபெற காவல் அதிகாரிகள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கினார். மேலும் அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் அலுவலகத்தை ஆய்வு செய்தும் அங்கு பணியல் இருந்த காவல் ஆளிநர்களுக்கு தக்க அறிவுரைகளை திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வழங்கினார்கள்.

அதே போல் கரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி பணிபுரியுமாறு காவல் ஆளிநர்களுக்கு அறிவுரை வழங்கியும் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற காவல் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT