திருச்சி மாவட்டம் சாரநாதன் பொறியியல் கல்லூரியில்,இந்தியத்தேர்தல் ஆணையத்தின்உத்தரவின்பேரில், 20 மாவட்டங்களில்இருந்து,தேர்தல்அலுவலர்கள் 118 பேருக்கு, பிரத்யேகப் பயிற்சிபெற்ற 7 பயிற்சியாளர்களைக்கொண்டு கடந்த 27.01.21 முதல் 30.01.21 வரைபயிற்சி நடத்தப்பட்டது.
பயிற்சி வகுப்புகளை மேற்பார்வையிடவும்தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கும் பொருட்டு, திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு வருகைதந்த தமிழகத் தேர்தல் ஆணையர்சத்ய பிரதா சாகு, பயிற்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கியதோடு, தேர்தல் பணிகளைச் சிறப்பாகச் செய்யவாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், நடைபெறக்கூடிய சட்டமன்றத் தேர்தலை மிகச் சிறப்பாகக் கையாள வேண்டும் என்றும் எப்போதும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.