ADVERTISEMENT

திருச்சியை பரபரப்பாகிய சாமியாரின் ஆடியோ விவகாரம்... பிடிப்பட்ட முக்கிய குற்றவாளி..! 

11:04 AM Jul 31, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT


திருச்சி மாவட்டம், அல்லித்துறை பகுதியில் வசித்துவரும் பாலசுப்ரமணியன் (எ) தேஜஸ் சுவாமி (31) என்பவர் சமீபத்தில் வழக்கறிஞர் கார்த்திக் என்பவரோடு உரையாடும் ஆடியோ பதிவு வாட்ஸ்ஆப் மூலம் பரவி, திருச்சியில் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

அதில், தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு பல புதிய உயர் அதிகாரிகள் தனக்கு மிக நெருக்கமாக இருப்பதாகவும், தமிழ்நாட்டில் 42 ரவுடிகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் என்கவுண்டர் போடலாம் என்றும் பேசியிருந்தார். மேலும், அதன் காரணமாக திருச்சியைச் சேர்ந்த சில ரவுடிகள் தன்னை வந்து பார்த்ததாகவும், எனவே உங்களுக்குத் தெரிந்த ரவுடிகளைக் கவனமாக இருக்கச் சொல்லவும் எனவும் அறிவுரை கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து திருச்சி காவல்துறை, பாலசுப்பிரமணியனை பிடித்து விசாரணை செய்ய முடிவுசெய்தனர். அதன்படி திருச்சி டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பாலசுப்பிரமணியனை பிடித்து ஆடியோ குறித்து விசாரணை செய்தனர்.

பிறகு 20.07.2021 அன்று அவர் கைது செய்யப்பட்டார். தனிப்படை போலீசாரின் விசாரணையில், இந்த வழக்கில் கொட்டப்பட்டு ஜெய் என்பவர் முக்கியக் குற்றவாளி என்பது தெரியவந்தது. அதன் பிறகு இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாமியார் பாலசுப்பிரமணியன் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ஆகியோரை கைதுசெய்த தனிப்படை, அவர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான கொட்டப்பட்டு ஜெய், பொன்மலை பகுதிக்குட்பட்ட அரசு மதுபானக் கடையில் அத்துமீறி நுழைந்து மது பாட்டில்களைக் கொள்ளை அடித்தது மட்டுமின்றி, மிரட்டி பணம் பறித்துச் சென்றதாக ஏற்கனவே பொன்மலை காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், சாட்சி சொல்வதற்காக நீதிமன்றத்திற்கு வரும் நபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கும் இவர் மீது உள்ளது. இந்த வழக்குகளில் இவர் ஏற்கனவே காவல்துறையினரால் தேடப்பட்டுவந்தார்.

இந்நிலையில், கொட்டப்பட்டு ஜெய் என்பவர் கொடைக்கானலில் மறைந்திருந்த தகவலை சேகரித்த காவல்துறையினர், கொடைக்கானல் விரைந்து சென்று அவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொட்டப்பட்டு ஜெய் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால், திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையர் அருண் உத்தரவின்பேரில் இன்று (31.07.2021) அவர் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT