ADVERTISEMENT

நீதிமன்ற வளாகத்திலேயே ரவுடி கொலை முயற்சி- மூவரை பிடித்து போலீசார் விசாரணை!

06:55 PM Sep 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை பிரபல ரவுடி மயிலை சிவா என்கிற சிவகுமார். சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்த சிவா அசோக்நகரில் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் சேத்துப்பட்டு போலீசார் 2022 ஆண்டு கொலைமுயற்சி வழக்கில் மதுர பாலாவை என்பவரை கைது செய்தனர். மதுர பாலா புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட போது பாத்ரூமில் வழுக்கி விழாமல் வழக்கத்திற்கு மாறாக வாகனத்தில் இருந்து தவறி விழுந்துள்ளார். அதில் பாலாவிற்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாலாவை அழைத்து சென்றனர். அப்பொழுது மூன்றுபேர் கொண்ட ரவுடி கும்பல் பாலாவை கொலை செய்ய திட்டமிட்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்ததால் உடனே அந்த ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.

இந்நிலையில் இன்று வேலூர் சிறையில் இருந்து ரவுடி பாலாவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது மீண்டும் ஒரு கும்பல் பாலாவை கொலை செய்ய முயன்றது. கோட்டூர்புரம் போலீசார் அக்கும்பலை வளைத்து பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

பிரபல ரவுடி சீடி மணியின் வலதும் இடதுமாக அரும்பாக்கம் ராதாகிருஷ்ணணன், மதுர பாலா இருவரும் இருந்தனர். தற்போது ராதாகிருஷ்ணன் மற்றும் பாலா இருவருமே வேலூர் சிறையில்உள்ளனர். எண்ணூர் தனசேகரன், டி.பி.சத்திரம் தட்சிணாமூர்த்தி, திருவெல்லிக்கேணி அபாஸ், சிவகுமார் ஆகியோர் தரப்பு தற்போது மதுர பாலாவிற்கு எதிரியாக இருக்கும் பட்சத்தில் இவர்களில் யாராவது ஒருவர்தான் இந்த கொலை முயற்சிக்கு காரணமாக இருக்கமுடியும் என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த கோணத்தில் போலீஸ் தரப்பு விசாரணையை தொடங்கி உள்ளார்களாம்.

அதேபோல் இந்த கொலை முயற்சி சம்பவத்தில் மதுர பாலா மீதும் சந்தேகமும் எழுந்துள்ளது. தன்னை முதலில் ஸ்டான்லி மருத்துவமனையில் கொலை செய்ய வந்த மூன்று பேரும் இவரே செட் செய்த கும்பல் என்று பேசப்படுகிறது. தன்னை யாராவது கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தாலும், ஸ்டான்லி மருத்துவமனையில் கன்விட் பாதுகாப்பு முறையாக கிடைக்க இப்படி செய்ததாகவும் போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. அதேபோல தனக்கு பாதுகாப்பு வேண்டி இப்படி அவரே கொலை முயற்சி செய்ய ஆட்களை செட் செய்திருப்பாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகிறார்கள் போலீசார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT