'Only the hard work should be seen'-threatened by the rowdy

சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள முடிச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜ் (23). இவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை செய்து வந்தார். அதே சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த 35 வயது பெண் ஒருவருடன் யுவராஜ்பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில்இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பேசாமல் இருந்துள்ளனர்.

Advertisment

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த யுவராஜ் அவரிடம் இது தொடர்பாக சண்டையிட்டுள்ளார். மேலும் அந்தப் பெண்ணின் செல்போனில் இருந்து அந்த நபரின் மொபைல் எண்ணை எடுத்த யுவராஜ் அந்த நபருக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.

Advertisment

அந்த நபரோ ரவுடி ஒருவரின் உதவியுடன் யுவராஜுக்கு போன் செய்து பதிலுக்கு மிரட்டத்தொடங்கியுள்ளார். தான் பல கொலைகள் செய்திருப்பதாகவும் என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும்இனி தலையிட்டால் உன்னையும் கொலை செய்வேன் என யுவராஜை மிரட்டியுள்ளார் அந்த ரவுடி. இந்நிலையில் ரவுடியின் மிரட்டலுக்கு பயந்த யுவராஜ் வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யுவராஜிற்கும் அவரைத்தொடர்பு கொண்டு மிரட்டிய ரவுடிக்கும் இடையேயான உரையாடல் தொடர்பான ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் 'நீ போலீஸ் ஸ்டேஷனுக்கு போ...நானும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போறேன். என் மேல ஏகப்பட்ட கேஸ் இருக்குது. உன்ன புடிச்சு உள்ள போடுவாங்களா, இல்ல என்ன புடிச்சு உள்ள போடுவாங்களாபார்ப்போமா. நீ பொழைக்க வந்திருக்கதம்பி. பொழைக்கிற வேலையை மட்டும் பாக்கணும். நான் இந்த ஏரியாக்காரன். எனக்கு சென்னை ஃபுல்லா ஆள் தெரியும். சரியா... நீ எங்க நடமாட்ற, என்ன பண்ற எல்லா டீடெயில்ஸ் எனக்கு வந்துருச்சு..'என அந்த மிரட்டல் ஆடியோ தொடர்கிறது.

Advertisment