சென்னை திருவல்லிகேணியில் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த ரவுடியை குடும்பத்தினர் முன்னிலையிலேயேவெட்டிய மர்ம கும்பல் வெட்டப்பட்ட ரவுடியின் மூளையை தட்டில் வைத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

incident in chennai.... police investigation

சென்னை திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பத்தை சேர்ந்த ரவுடி அறிவழகன்.19 வயதிலேயே ரவுடி பட்டியலில் அடையாளம் காணப்படும் அளவுக்கு பல்பு குமார்என்பவரை கொலை செய்ய முயன்ற வழக்கு மற்றும் பல கொலை அடிதடி சம்பவங்களில் தொடர்புடையவராக இருந்த அறிவழகன் நேற்று இரவு திருவல்லிக்கேணியில் உள்ள வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

Advertisment

incident in chennai.... police investigation

incident in chennai.... police investigation

அப்போது அரிவாள் கத்தியுடன் வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் அறிவழகனை குடும்பத்தினரின் முன்பே வெட்டி சாய்த்தது. ரத்தவெள்ளத்தில் சரிந்த அறிவழகன் உயிரிழந்த நிலையில் அறிவழகனின் மூளை பகுதியை வெட்டி எடுத்த அந்த கும்பல் அதை ஒரு தட்டில் வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது. இந்த அதிர்ச்சி சம்பவத்தை அறிந்த திருவல்லிக்கேணி போலீசார் பல்பு குமாரின் தம்பியான சொரி விஜய் மற்றும் பலரை தேடிவருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.