ADVERTISEMENT

ஐயப்பன் புனிதத்தை கெடுக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகள்  இடம்பெறும் கூட்டணியை   தோற்கடிப்பதே லட்சியம் - அர்ஜுன் சம்பத் 

01:26 AM Jan 06, 2019 | sundarapandiyan


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள ஆஞ்சநேயர் திருக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டார். இக்கோயிலில் உள்ள ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளும் தீபாரதனையும் செய்யப்பட்டது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஆஞ்சநேயரின் வீதி உலாவை தொடங்கி வைத்தார். இவ்வீதி உலாவனது, மங்கலம்பேட்டையில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக 100-க்கும் மேற்பட்ட, போலீஸ் பாதுகாப்புடன் சென்றது.

ADVERTISEMENT

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அர்ஜுன் சம்பத் அவர் கூறியதாவது :-

ADVERTISEMENT

’’இப்பகுதியில் நடக்கும் மோசடி மதமாற்றத்தை முறியடிப்பதற்காக 96 அடி உயரத்தில் வெண்கலத்தாலான ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட உள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சிறப்பு சட்டம் அமைக்க வேண்டும் என்று அனைத்து பகுதியிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

ஐயப்பன் புனிதத்தை கெடுக்க நினைக்கும் கம்யூனிஸ்டுகள் இடம்பெறும் அதிமுக திமுக உள்ளிட்ட கூட்டணிகள் எதுவாக இருந்தாலும், வருகின்ற திருவாரூர் இடைத்தேர்தலில் தோற்கடிப்பதே இந்து மக்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகும்.

ஆன்மீக அரசியல் முன்னெடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அரியணையில் ஏற இந்து மக்கள் கட்சி அனைத்து தேர்தலிலும் தீவிரமாக உழைக்கும்.


கௌசல்யா திருமணமானது திராவிட பாணியில் பெரியார் சிலை முன்பு நடைபெற்றது. இதில் சக்தி ஒழுக்கம் கெட்டவர் என ஒரு பெண் புகார் அளித்தும், அதை கெளசல்யா, சக்தியும் ஒப்பு கொண்ட பின், கட்டப்பஞ்சாயத்து செய்து தீர்வு காணும் தியாகு மற்றும் கொளத்தூர் மணி ஆகியோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்து செய்வது குற்றம் என்பதால் உடனடியாக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் மனிதி என்ற பெண்கள் அமைப்பானது, கம்யூனிஸ்ட் அமைப்பு. திராவிடத்தை ஆதரிக்கும் இந்த அமைப்பை பயன்படுத்தி ஐயப்பன் கோவில் புனிதத்தையும், கேரளாவில் சட்ட ஒழுங்கையும் சீர்குலைக்க செய்யும் இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும். இந்த அமைப்பில் உள்ளவர்களை தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும்.’’

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT