ADVERTISEMENT

TANCET 'டான்செட்' நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

09:28 AM May 06, 2019 | santhoshb@nakk…

தமிழகத்தில் முதுகலைப்பட்டப்படிப்பில் (M.E , M.Tech, M.Arch,M.Plan ,M.C.A , M.B.A) சேருவதற்கு ஆண்டுதோறும் "Tamilnadu Common Entrance Test" -2019 (TANCET -2019) என்ற நுழைவுத்தேர்வை தமிழக அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் இணைந்து நடத்தி வருகிறது. இந்த தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடைப்பெற்று மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிக்களை தேர்வு செய்வார்கள் . இதன் படி 2019-2020 கல்வியாண்டிற்கான "TANCET - 2019" தேர்வு தொடர்பான அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதற்கான விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 08/05/2019 , தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் : 25/05/2019. இந்த தேர்வுக்கு இணையதள வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அண்ணா பல்கலைக்கழகம் தனது அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. அதற்கான இணைய தள முகவரி : https://www.annauniv.edu/tancet2019 அல்லது https://www.annauniv.edu ஆகும். மேலும் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் இணைய தள வழியில் (Net Banking , Credit card , Debit card) செலுத்த வேண்டும் . அதே போல் (General / OBC) எனில் ரூபாய் 500 தேர்வு கட்டணம் , (SC/ST/SCA) எனில் ரூபாய் 250 தேர்வு கட்டணம் ஆகும்.

( TANCET - 2019 )நுழைவுத்தேர்வு நடைப்பெறும் நாட்கள் மற்றும் நேரம்.
1. M.C.A - 22/06/2019 (FN) - 10.00 AM - 12.00 PM.
2. M.B.A - 22/06/2019 (AF) - 2.30 PM - 4.30 PM.
3. M.E/M.Tech/M.Arch/M.Plan - 23/06/2019 (FN) - 10.00AM - 12.00PM.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT