ADVERTISEMENT

ஆசிரியரைத் தாக்கிய முன்னாள் மாணவர்கள்.. 

09:30 AM Feb 01, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வன்றந்தங்கள் கிராமத்தில் ஜனவரி 30ஆம் தேதி மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு சென்று அதனைக் கண்டு ரசித்தனர். காட்பாடியில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 45 வயதானவர் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றிவருகிறார். அவர் மஞ்சுவிரட்டை ரசித்துவிட்டு பள்ளி அருகே வந்துள்ளார்.

அப்போது, தான் பணியாற்றும் பள்ளி அருகே சிலர் அமர்ந்து மது அருந்திக்கொண்டு இருந்ததைக் கண்டுள்ளார். அங்கு சென்றபோது அது அவரிடம் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது. பள்ளி அருகில் அமர்ந்து மது அருந்துவது தவறு எனச் சொல்லியுள்ளார். மது போதையில் இருந்த அவர்கள், மது பாட்டிலைப் பள்ளியின் சுவற்றில் வீசியபோது அது ஆசிரியை மீது பட்டு அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

அவர் வலியால் அலறி துடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். அங்கு காயம் பட்ட முகத்தில் தையல் போட்டுள்ளனர். இது தொடர்பாக காட்பாடி காவல்நிலையத்துக்குத் தகவல் கூறப்பட்டுள்ளது. அந்த ஆசிரியையும் புகார் தந்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டதில், 17 வயது சிறுவன் மற்றும் 19 வயதான அவரது நண்பர் ஆகிய இருவரும்தான் இந்தச் செயலில் ஈடுபட்டது எனத் தெரியவந்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீஸார், இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT