ADVERTISEMENT

ஆன்லைனில் பாதாம், பிஸ்தா; கோடியில் மோசடி; சைபர் கிரைமில் குவியும் புகார்கள்

09:44 PM Nov 03, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆன்லைனில் 50 முதல் 70% வரை தள்ளுபடி விலையில் பொருட்களை வழங்குவதாக பிரபல ஷாப்பிங் நிறுவனங்களைப் போல் போலி ஆப் உருவாக்கி, லிங்கை அனுப்பி மோசடி செய்கின்றனர். கடந்த ஒரு வாரமாக ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் பெயரில், சமூக வலைத்தளங்களில் வந்தது. அதில் முந்திரி, பாதாம், உலர் திராட்சை, பிஸ்தா ஆகிய நான்கும் சேர்த்து 4 கிலோ 399 ரூபாய்க்கு மலிவு விலையில் வழங்குவதாக விளம்பரம் இருந்தது. இதை நம்பி ஏராளமானோர் வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்தனர்.

உடனடியாக அவர்களின் மொபைல் எண் ஹேக் செய்யப்பட்டு வங்கியில் உள்ள அவர்களது மொத்த பணமும் கும்பல் சுருட்டியுள்ளது. இதில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பலர் பாதித்துள்ளனர். அவர்கள் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் 25 புகார்கள் வந்துள்ளது. இதில் 1.50 கோடி ரூபாய் வரை மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, 'தற்போது ஆன்லைனில் மோசடி செய்வது அதிகரித்துள்ளது. வங்கி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்களை எந்த ஒரு லிங்க்கிலும் பகிர வேண்டாம். தங்கள் வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டால் சைபர் கிரைம் இலவச தொடர்பு எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் புகார் அளிக்கலாம்' இவ்வாறு அவர்கள் கூறினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT