Skip to main content

ஈரோட்டில் 'ஹாப்பி ஸ்ட்ரீட்'-குவிந்த மக்கள்

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

 Erode's 'Happy Street'-throngs of people

 

ஈரோட்டில் போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுக்கான ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

 

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாவது முறையாக பன் ஸ்ட்ரீட் என்ற பெயரில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' கொண்டாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதன் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது.

 

ஈரோடு சோலார் அடுத்த புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடத்தப்பட்டு வரும் ஃபன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சுமார்5 ஆயிரத்திற்கும் இளைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 80 அடி சாலையில் மேடை அமைக்கப்பட்டு திரைப்படப் பாடல்களுக்கு வயது வித்தியாசமின்றி ஆண், பெண் என இருபாலரும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்று நடனமாடினார்.


மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வுக்கான இந்த பன் ஸ்ட்ரீட் நடத்தப்படுவதாகவும், காலையிலே  5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். இதில் சிலம்பம், கும்மி ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிப்பதாகவும் தெரிவித்தனர். சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களைத் தொடர்ந்து ஈரோட்டில் நடத்தப்பட்டது இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 200 க்கும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

கள்ளச்சாராயம் குடித்து 4 பேர் உயிரிழப்பு; கண்ணீர் வடிக்கும் உறவுகள்

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
4 people passed away after drinking Kallakaryam in Kallakurichi

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டபடுகிறது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், அதனைப் பத்துக்கும் மேற்பட்டோர்கள் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான் தற்போது ஜெகதீஷ், பிரவீன், சுரேஷ், சேகர் ஆகிய 4 பேர் கள்ளச்சாரம் அருந்தி உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தற்போது கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 4 பேர் பலியான  சம்பவத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை யாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை செய்யவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பகுதியில் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ் என்பவர் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கள்ளச்சாரயம் குடித்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிக்கிசை பெற்று வருகின்றனர்.

அதேசமயம் உயிரிழந்த 4 பேரும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கவில்லை என்று கூறிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரேதப்பரிசோதனைக்கு பிறகு அவர்கள் எப்படி உயிரிழந்தார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகும் எனத் தெரிவித்தார். ஆனால் உயிரிழந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் கள்ளச்சாரயம் குடித்துதான் உயிரிழந்தார்கள் என்று தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக இறந்தவர்களின் உறவினர்கள் கூறும் போது, இரவு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகுதான் கண் எரிச்சல், வயிற்று வலி, வாந்தி போன்றவைகள் ஏற்பட்டது. அப்போது அவர்களிடம் கேட்டதற்கு கள்ளச்சாராயம் குடித்துவிட்டு வந்தேன் என்றார்கள். கள்ளச்சாராயத்தினால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கடைசி குடும்பம் எங்கள் குடும்பமாக இருக்கட்டும். இனிமேலாவது கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். 

Next Story

பசுமாட்டின் வாயில் வெடித்த நாட்டு வெடிகுண்டு - இருவர் கைது 

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Two people were arrested for storing

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட ராளகொத்தூர் பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மஞ்சுளா தம்பதியினரின் பசுமாடு ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்தது. அப்போது, அங்கே நிலத்தில் ஏதோ காய் எனக் கடித்தபோது நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாட்டின் வாய் மற்றும் தாடை பகுதி கிழிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது.

இது குறித்து  உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில்  குப்புராஜாபாளையம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (24) மற்றும் அங்கியாபள்ளி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் வனவிலங்குகளை வேட்டையாட விவசாய நிலங்களில் ஆங்காங்கே நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதும். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு வெடித்து மேய்ச்சலுக்கு விடப்பட்டிருந்த பசுமாட்டின் வாய் மற்றும் தாடை கிழிந்ததும் தெரியவந்தது. 

இவர்கள் விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்து வனவிலங்குகளை வேட்டையாடி வருவதும் தெரியவந்தது. இது தொடர்பாக இருவர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.