ADVERTISEMENT

ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள் ஆலோசனை!

11:21 PM Jun 14, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (14/06/2022) காலை 11.00 மணிக்கு அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தமாத இறுதியில் அதிமுகவின் பொதுக்குழு கூடவிருக்கும் நிலையில் அது குறித்தான விவகாரங்களை இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதேபோல், அதிமுக அலுவலகத்தில் வெளியே கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இரு தரப்பினர்களாக பிரிந்து ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்றும் மற்றொரு தரப்பு ஓ.பி.எஸ். தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்நிலையில் 'அஇஅதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி' என்ற வாசகங்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் உட்பட தேனி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், காமராஜ் மற்றும் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT