JM Basheer fired from AIADMK ...- AIADMK leadership announcement!

அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புக்களிலிருந்தும்நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ்- இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Advertisment

admk

அதிமுகவின் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளராக இருந்த ஜெ.எம்.பஷீர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் 'இஸ்லாமியர்களுக்குஎடப்பாடி பழனிசாமி இழைத்த துரோகத்தை ஆதாரத்துடன் எடுத்து வைத்து, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருக்கிறேன்' எனக் கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில், கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட ஜெ.எம்.பஷீரை சிறுபான்மையினர் நலப்பிரிவு மாநில துணை செயலாளர் பதவியிலிருந்து மட்டுமல்லாது கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.