அ.தி.மு.கவின் அடுத்தமுதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளநிலையில், இது குறித்து நாளைஅ.தி.மு.க தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இது தொடர்பாக அமைச்சர்கள் அவ்வப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்பொழுது பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் உள்ள நிலையில், தற்பொழுது அமைச்சர் காமராஜ் வருகை புரிந்துள்ளார். அதேபோல்துணை முதல்வர் ஓ.பி.எஸ் உடன் கே.பி.முனுசாமி,மனோஜ் பாண்டியன் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.