ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டம் விவசாயிகளைப் பாதிக்காது -முதல்வர் உறுதி!

06:32 PM Sep 19, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வேளாண் மசோதாவை அரசியலாக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வேளாண் மசோதா விவசாயிகளைப் பாதிக்காது எனக் கருத்துத் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் உள்ளன எனக் கூறியுள்ளார். மேலும், விவசாயிகளைப் பாதிக்கும் எந்த அம்சங்களும் அதில் இல்லை. குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் இயங்கி வரும், நெல் கொள்முதல் எந்த விதத்திலும் விவசாயிகளைப் பாதிக்காது. வேளாண் சட்டத்தால் விவசாயிகள் நலனும், கொள்முதல் செய்வோர் நலனும் பாதுகாக்கப்படும்.

முறையான போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் விவசாயிகள் லாபகரமான விலைபெற வழி செய்ய முடியும். மத்திய அரசின் சட்டம், உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதை தடுக்க வழி செய்கிறது. விளைபொருட்களின் மதிப்பு, எதிர்பாராத வகையில் வீழ்ச்சி அடைந்தால், ஏற்படும் பாதிப்புகள் தவிர்க்கப்படும். கிராமப்புறங்களில் உணவு பதப்படுத்துதல் போன்ற தொழில்கள் பெருகி வேலை வாய்ப்பு ஏற்படும். தமிழகத்தில் கரும்பு, கோகோ சாகுபடி, கோழிப்பண்ணை போன்றவற்றில் ஏற்கனவே ஒப்பந்த முறை உள்ளது.

பஞ்சாப் போன்ற மாநிலங்களின் நிலைமையுடன் தமிழகத்தை ஒப்பிடுவது சரியல்ல எனத் தெரிவித்துள்ள முதல்வர், வேளாண் மசோதாக்களை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியலாக்குவதாகக் குறிப்பிட்டதோடு இதற்கு கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், இதேபோன்ற சட்டத்தை இதற்கு முன்னாள் அ.தி.மு.க ஆட்சியில் அமல்படுத்தியபோது ஸ்டாலின் ஏன் எதிர்க்கவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT