Edappadi

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

சேலத்தில் நடந்து கொண்டிருக்கும் கண்டனபொதுக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதில் அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸுக்கு திமுகவிற்கு பங்குண்டு எனவே இவர்கள் இருவருமே போர்க்குற்றவாளிகள் என கூறினார்.

இலங்கை படுகொலைக்கு இந்தியா உதவியது என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே அண்மையில் பேட்டியளித்திருந்த நிலையில் இலங்கை தமிழர் படுகொலைக்கு அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிதான் காரணம். எனவே அவர்களை போர்க்குற்றவாளிகள் என அறிவிக்க வேண்டும்என அதிமுகமாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதனை அடுத்து இன்று சேலத்தில் நடந்து வரும் கண்டன கூட்டத்தில் பேசிய எடப்பாடி , இலங்கையில் நடந்த போர் குற்றத்திற்கு காங்கிரஸ்-திமுக கூட்டணிதான்காரணம். ஆனால் அதை மறைக்க கலைஞர் உண்ணவிரதம் என்ற பெயரில் நாடகத்தை நடத்தினார்.திமுக கட்சியல்ல அது ஒரு கம்பெனி. அங்கு குடும்ப ஆட்சிதான் நடக்கிறது. அதிமுகவில் யார் வேண்டுமானலும் எம்.எல்.ஏ, அமைச்சர் ஆகலாம். இப்போது மட்டுமல்ல ஜெயலலிதா அவர்கள் இருந்த பொழுதே அவருக்கு பல இன்னல்களை திமுக செய்துள்ளது. வேண்டுமென்றே எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறார் ஸ்டாலின். நாங்கள்மக்களுக்கு மட்டும்தான் பயப்படுவோம் உங்களுக்கு ஒருபோதும் பயப்படமாட்டோம்எனக்கூறிதிமுக குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாகவிமர்சித்தார்.